உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா

பரமக்குடி சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் முருகன் கோயில்களில் அருள் பாலிக்கும் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் காள பைரவருக்கு நேற்று மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வடைமாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

*பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் கால பைரவர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

*இதேபோல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில் என பல்வேறு கோயில்களில் காள பைரவ அஷ்டமி விழா நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !