உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநெல்வேலி : திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தேர் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (17 ம்தேதி) சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் தொடங்கி வைத்தார். கோவிந்தா, நாராயணா கோஷத்தோடு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !