உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ர கபாலீஸ்வர சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு

ஆருத்ர கபாலீஸ்வர சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு

திருப்பூர்: காங்கயம், மடவிளாகம், பாப்பிணியில் உள்ள ஸ்ரீஆருத்ர கபாலீஸ்வர சுவாமி கோவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரகுபதி நாராயண பெருமாள் கும்பாபிஷேகம் நடந்தது.

அதனை தொடர்ந்து, கடந்த 48 நாட்களாக மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், 48 நாள் மண்டலாபிஷேக பூஜை நிறைவு நாள் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. சிறப்பு  யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. பூஜைகளை பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம்  தலைமையில், சிவாச்சார்யார்கள் மேற்கொண்டனர். டு ஏதிரளான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !