உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரடையான் நோன்பு பெண்கள் வழிபாடு

காரடையான் நோன்பு பெண்கள் வழிபாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கணவரின் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் விருத்தியடைய பெண்கள் காரடையான் நோன்பு கடைபிடித்து வழிபட்டனர்.

சாவித்திரி நோன்பு என அழைக்கப்படும் இந்த காரடையான் நோன்பு இருந்தால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். அதன்படி, காரடையான் நோன்பினை கள்ளக்குறிச்சியில் பெண்கள் நேற்று  கடைபிடித்தனர். சுமங்கலி பெண்கள் விரதமிருந்து புது தாலிச்சரடு கட்டிக்கொண்டு கார அடை செய்து படையலிட்டு அம்மனை வழிபட்டனர். நேற்றைய தினம் மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம்  துவங்கும் நேரமான பகல் 11:00 மணி முதல் 11:15 வரையில் நோன்பிருந்து பூஜை செய்தனர். விரதமிருந்த பெண்கள், விநாயகருக்கு பூஜை செய்து, பஞ்சு திரி மற்றும் மஞ்சள் கயிற்றை சாற்றி சுமங்கலி  பாக்கியம் வேண்டி வழிபட்டனர். இதேபோல் சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !