சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த திட்டக்குடி முக்களத்தியம்மன்
ADDED :948 days ago
திட்டக்குடி: திட்டக்குடி முக்களத்தி அம்மன் கோவில் மூன்றாம் நாள் திருவிழாவில், அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திட்டக்குடி மேலவீதியில் உள்ள எல்லை தெய்வமான முக்களத்தி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 14ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. முதல்நாள் மற்றும் இரண்டாம் நாள் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார். மூன்றாம் நாள், சரஸ்வதி அலங்காரத்தில் வீணையுடன் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்ச்.21ம் தேதி, எட்டாம் நாள் திருவிழாவன்று ஊரணி பொங்கல், மார்ச்.22ம் தேதி, ஒன்பதாம் நாள் தேர்திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தாக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.