சோனை அழகாயி கோயில் மண்டலாபிஷேகம்
ADDED :1179 days ago
சிங்கம்புணரி: எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சியில் சோனை அழகாயி அம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது. இக்கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 3 ம் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து தினமும் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று 48 ஆம் மண்டல பூஜையை சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து நடத்தி வைத்தனர். சோனை அழகாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.