திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்ற கொடியேற்றுத்துடன் துவங்கியது. மே 1ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மற்றும் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு விநாயகர் வீதியுலா மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை சித்திரை பிரம்மோற்சவம், காலை 6:00 மணிக்கு கொடியேற்றம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு 7:00 மணிக்கு உற்சவர் கேடய வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று முதல், வரும் 28ம் தேதி வரை தினமும் காலை - இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும் 29ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
உத்சவ விபரம் நாள் உத்சவம்
ஏப்., 21 கொடியேற்றம், கேடய உலா
ஏப்.,22 வெள்ளி சூரிய பிரபை, பூத வாகனம்
ஏப்.,23 சிம்ம வாகனம், ஆட்டு கிடாய் வாகனம்
ஏப்.,24 பல்லக்கு சேவை, வெள்ளி நாக வாகனம்
ஏப்.,25 அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம்
ஏப்.,26 புலி வாகனம், யானை வாகனம்
ஏப்.27 மரத்தேர்
ஏப்.28 யாளி வாகனம், குதிரை வாகனம், தெய்வானை திருக்கல்யாணம்
ஏப்.29 கேடய உலா, சண்முகர் உத்சவம்
ஏப்.30 தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம், கொடியிறக்கம்
மே 1 சப்தாபரணம், காதம்பரி விழா.