சிதம்பரம் நடராஜருக்கு நவரத்தின சங்கிலி!
ADDED :4812 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, நவரத்தின டாலருடன் கூடிய தங்கச் சங்கிலி காணிக்கையாக செலுத்தப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள, நடராஜர் மற்றும் சிவகாம”ந்தரிக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, நவரத்தின டாலருடன் கூடிய தங்கச் சங்கிலியை, காட்டுமன்னார் கோவில் தொழிலதிபர் மணிரத்தினம் காணிக்கையாக செலுத்தினார். நடராஜப் பெருமானுக்கு பொது தீட்சிதர்கள் மற்றும் டிரஸ்டிகள் சார்பில் விசேஷ ருத்ராபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து, நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட டாலருடன் கூடிய தங்கச் சங்கிலியை நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு அணிவித்தனர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.