உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ ஸ்வாமி புதிய கோயில் கட்டும் பணி

காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ ஸ்வாமி புதிய கோயில் கட்டும் பணி

காளஹஸ்தி:  திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பிரசன்ன வரதராஜ ஸ்வாமி கோயிலின் புதிய கோயில் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்துவதற்கான சுபமூஹூர்த்தம் குறித்து ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .சீனிவாசுலு, கோயில் நிர்வாகிகள் மற்றும் வைஷ்ணவ ஆகம பண்டிதர்கள் ஆலோசனை நடத்தினர்.  பெரியவர்களின் ஆலோசனையின் பேரில், TTD திருமலை திருப்பதி தேவஸ்தான ஆகம வல்லுநர்கள், பஞ்சாங்க பேராசிரியர் வேதாந்தம் விஷ்ணுபட்டாச்சாரியாவைத் தொடர்பு கொண்டனர். வைணவ ஆகம விதிகளின்படி வரதராஜ சுவாமி கோவிலின் புதிய கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடத்த ஏப்ரல் 27ஆம் தேதி சுபமுஹூர்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.இதனால் அடுத்த மாதம் ஏப்., 27ம் தேதி பூமி பூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்தார். மேலும் ஏப்., 27ம் தேதி கோயில் கட்டுமான பணிக்கான பூமிபூஜை விழா நடைபெறுவதால், இதற்குள் வரதராஜ சுவாமி கோவிலில் உள்ள பழைய கோயில் (சிதிலங்கள்) இடிபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு பயன்பாட்டிற்குள் கற்களை பாதுகாத்து கள நிலையில் எந்த வித சிரமமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும்( கோவில் புனரமைப்பு) புதிய கோயில் கட்டும் பணிக்காக குப்பம் பகுதியில் இருந்து கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டு ஸ்ரீகாளஹஸ்தி ஸ்கிட் கல்லூரியில் சிற்பி வரை படம் தயார் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். பூமி பூஜைக்கு பின் கோவில் புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ காளஹஸ்தி ஆர்.டி.ஓ.ராமாராவ் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தான செயற்பொறியாளர் முரளிதர், துணை பொறியாளர் சீனிவாஸ் ரெட்டி, கிஷோர் குமார் கோயில் கண்காணிப்பாளர் லோகேஷ்பாபு லட்சுமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !