உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான இடம் மீட்பு

சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான இடம் மீட்பு

தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான,ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஏக்கர் இடம் பல ஆண்டுகளுக்கு பிறகு கையகப்படுத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் மூப்பக்கோவிலில்  உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சமூகத்தினர், ஆக்கிரமிப்பு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து அந்த இடத்தை கோவில் நிர்வாகம் கையகப்படுத்த முடிவு செய்தது. அதன்படி, சாரங்கபாணி கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வி.ஏ.ஓ., கிராம நிர்வாக அலுவலர் எஸ்.மவுனீஸ்வரன், நில அளவையர் ரேனுகா ஆகியோர், சுமார் இரண்டு  ஏக்கர் இடத்தை கையகப்படுத்தி, சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்தனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில், கும்பகோணம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !