உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானைஸ்வரர் கோவிலில் பங்குனி அமாவாசை சிறப்பு வழிபாடு

வீரட்டானைஸ்வரர் கோவிலில் பங்குனி அமாவாசை சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானைஸ்வரர் கோவிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று பங்குனி அமாவாசையை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், கலச ஸ்தாபனம் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !