உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மறறும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. செவ்வாய்க்கிழமை கந்தபெருமானுக்கு உகந்த நாள் என்பதால், செவ்வாய்க்கிழமைகளில் கந்தபெருமானை தரிசிக்க ஏராளமானோர் திரள்கின்றனர். நேற்று, செவ்வாய்க்கிழமை என்பதாலும், செவ்வாயுடன் பங்குனி அமாவாசை வந்ததாலும், கோவிலுக்கு காலை முதலே பக்தர்கள் வர ஆரம்பித்தனர். நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !