உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகலூர் ஆதீஸ்வரர் ஜெயின் கோவிலில் யுகாதி பண்டிகை விழா

அகலூர் ஆதீஸ்வரர் ஜெயின் கோவிலில் யுகாதி பண்டிகை விழா

செஞ்சி: அகலுார் ஆதீஸ்வரர் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சாமி வீதி உலா நடந்தது.

செஞ்சி அடுத்த அகலூர் கிராமத்தில் உள்ள 1008 ஆதீஸ்வரர் ஜெயின் கோவிலில் இன்று தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை விழா நடந்தது. இதை முன்னிட்டு தரணேந்திரர், பத்மாவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து ஜெயினர் வீதிகளில் சாமி ஊர்வலம் நடந்தது. பின்னர் தரணேந்திரர், பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பஞ்சாமிர்த பூஜை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. இதில் உபயதாரர்கள் மற்றும் திரளான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !