சாரதாம்பாள் கோவிலில் வசந்த நவராத்திரி விழா துவக்கம்
ADDED :930 days ago
புதுச்சேரி : எல்லைப்பிள்ளைசாவடி, சாரதாம்பாள் கோவிலில் 17 ம் ஆண்டு வசந்த நவராத்திரி விழா துவங்கியது.
புதுச்சேரி, எல்லைப்பிள்ளைசாவடி, நுாறடி சாலையில் உள்ள சிருங்கேரி சிவகங்கா மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் 17 ம் ஆண்டு வசந்த நவராத்திரி விழா நேற்று துவங்கியது. தொடர்ந்து வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. விழாவை யொட்டி, நேற்று காலை 10.00 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சாரதாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், தீபாராதனை நடந்தது. இதே போல், வரும் 30ம் தேதி வரை தினந்தோறும் சகஸ்ரநாம லட்சார்ச்சனை பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகக்குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்தனர்.