உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி, நேற்று யுகாதி உற்சவம் நடந்தது.

அதிகாலை சுப்ரபாத சேவை, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து விஸ்வக்சேனர் வழிபாடு, கலச ஆவாஹனம் பூஜைகள் நடந்தது. பெருமாள் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவர்களை எழுந்தருள செய்தனர். பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மங்கல பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்தபின், சாற்றுமுறை சேவை, அலங்கார தீபங்கள் வழிபாடு நடந்தது. பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி கடைத்தெருவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கச்சிராயபாளையம் சாலை ஆசிரியர் நகரில் உள்ள பெருமாள் கோவிலிலும் யுகாதி சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !