கோவை ராமர் கோவிலில் ஸ்ரீ ராமநவமி விழா
ADDED :929 days ago
கோவை: ஸ்ரீராமநவமியை முன்னிட்டு, ராம்நகரிலுள்ள கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் மூல பாராயணம் நேற்று துவங்கியது.
வால்மீகி ராமாயண பாராயணத்துக்கு முன்னதாக சொல்லப்படும் தியான ஸ்லோகங்களான, பிள்ளையார், சரஸ்வதி தேவி, வால்மீகி முனிவர், ஆஞ்சநேயர், சீதா சமேத ஸ்ரீ ராமர் பற்றிய ஸ்லோகங்கள், பாராயணம் செய்யப்பட்டன. மூலபாராயணத்தில், 24,000 ஸ்லோகங்கள் உள்ளன. அவற்றில் அனைத்து விஷயங்களும் பொதிந்துள்ளன. அவற்றை நேற்று ராமர் கோவில் சன்னிதியிலுள்ள மகாமண்டபத்தில், வேத விற்பன்னர்கள் இருவர் பாராயணம் செய்தனர். அன்றாடம் காலை 8:00 மணிக்கும், மாலை 5:30 மணிக்கும் மூல பாராயணம் நடக்கிறது.