உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் வெங்கடேச பெருமாள் உலா

கருட வாகனத்தில் வெங்கடேச பெருமாள் உலா

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் யுகாதி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவு கோவில் வளாகத்தில், வெங்கடேச பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, உலா வந்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !