நிம்மதியாக வாழ ஷீரடி சாய்பாபா கூறும் எளிய வழி..!
* நல்லதோ, கெட்டதோ உனக்குரிய வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும். என்கிறார் ஷீரடி சாய்பாபா
* கடவுளை தரிசிக்க பலரும் விரும்பலாம். ஆனால் உண்மையான பக்தி உள்ளவருக்கு மட்டுமே அது சாத்தியம்.
* வாழ்க்கையில் இன்பம், துன்பம் மாறி மாறி வந்தாலும் நிலைத்திருப்பதில்லை.
* மனிதபிறவி மகத்தானது. அதை பயனுள்ள வகையில் பயன்படுத்துங்கள்.
* துன்பத்தில் வருந்துபவர்களுக்கு உதவுவது, உன் தலையாய கடமையாக இருக்கட்டும்.
* மனம் துாய்மையாக இருந்தால் நிம்மதியாக வாழலாம்.
* உண்மை எது என்பதை கண்டறிந்து செயல்படுவதே விவேகம்.
* ஆணவத்தை கைவிட்டு ஆர்வமுடன் பணியில் ஈடுபடு.
* உனக்கு தேவையானதை பணிவுடன் கடவுளிடம் முறையிடு.
* சுவாசிப்பது மட்டும் வாழ்க்கையல்ல. பிறருக்கு சேவை செய்வதே வாழ்க்கை.
* பணத்தால் செய்த வினைகளின் பயனை தடுக்க முடியாது.
* பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே.
* குறிக்கோள் உடையவர்கள் மங்காத புகழுடன் வாழ்வர்.
* கடவுள் மீது பக்தி செலுத்து. மனம் அமைதியாக இருக்கும்.
* நீ தர்மத்தை கவனித்தால், கடவுள் உன்னை கவனிப்பார்.