அம்ச காளியம்மன் கோவிலில் விழா
ADDED :898 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே சிறுமுகை சாலையில், அம்ச காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐந்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. காலை மங்கள இசையுடன் விழா துவங்கியது. மகா கணபதி ஹோமம் முடிந்த பின்பு, 1008 லலிதா சகசர நாம பாராயணம் நடந்தது. அதைத் தொடர்ந்து அம்ச காளியம்மனுக்கும், கருப்பராயர் சுவாமிக்கும் அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். சிறப்பு பூஜை செய்து, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.