உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு

நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு

மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியிலுள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் மழை வேண்டி, சிறப்பு வழிபாடு, கூட்டு பிரார்த்தனை. சிவசண்முக பாபு சாமி தலைமையில் நடந்தது. 1008 மலர்களை கொண்டு பீடத்தின் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் இந்திரன் வழிபாடு செய்தனர். மூன்று மணி நேரம் நடந்த சிறப்பு வழிபாடு குறித்து சிவசண்முக பாபு சாமி கூறுகையில், " ..மழை குறைந்தால் விவசாயம், தொழில் வளம் குறையும், இதனை தவிர்க்க இந்திரனை பூஜை செய்தால் நிச்சயமாக கன மழை பெய்யும். ஏரி, குளம், நீர் நிலைகள், நதிகள் நிரம்பி வழியும்" என்றார். வழிபாட்டில் குருமாதா சரஸ்வதி, பாக்யலட்சுமி, உமா மகேஸ்வரி, வனஜா உள்ளிட்டோர் சிறப்பு அபிஷேக பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !