உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம்!
ADDED :4872 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. சதுர்த்தி விழாவையொட்டி, உப்பூர் விநாயகர் கோயிலில் சித்தி, புத்திதேவியருடன் விநாயகருக்கு, நேற்று மாலை 4.30க்கு திருக்கல்யாணம் நடந்தது. திருமணத்தை, குருக்கள் ரவிக்குமார் நடத்தி வைத்தார். பின்னர் மொய் விருந்து அளிக்கப்பட்டது. இன்று மாலை 4.30க்கு தேரோட்டமும், நாளை தீர்த்தவாரியும் நடக்கிறது.