மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :966 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 10ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 10ம் ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதனையொட்டி, இன்று காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம் நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில், கலச பூஜை, 1,008 சங்கு பூஜை, ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. இதனைத்தொடர்ந்து, மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு, 1,008 சங்காபிஷேகமும், கலசபிஷேகமும் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.