உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் பங்குனி உற்சவ பெருவிழா

லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் பங்குனி உற்சவ பெருவிழா

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா தொடங்கியுள்ளது. லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 6ம் தேதி பால்குட ஊர்வலமும் பூக்குழி இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாரிமுத்து சுவாமிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !