தண்டாயுதபாணி கோவிலில் பச்சை சாற்றுதல் பெருவிழா
ADDED :938 days ago
கடலுார் : கடலுார் பால தண்டாயுதபாணி கோவிலில் பச்சை சாற்றுதல் பெருவிழா நடந்தது.
கடலுார், கூத்தப்பாக்கம் பால தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி மாத கிருத்திகையொட்டி பச்சை சாற்றுதல் பெருவிழா நடந்தது. இதனையொட்டி காலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு பால தண்டாயுதபாணிக்கு பச்சை சாற்றுதல், சிறப்பு அலங்காரம், சுவாமி கோவில் உள் புறப்பாடு, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சதீஷ் குருக்கள் செய்திருந்தார்.