உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம் துவக்கம்

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம் துவக்கம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 முதல் 11:30 மணி வரை கொடியேற்றம் நடந்தது.ஆதிஜெகநாத பெருமாள்கோயிலில் கருடாழ்வார் சன்னதி முன்புறமுள்ள கொடிமரத்திற்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. பின் கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு தர்ப்பையால் சுற்றி கட்டப்பட்டு கொடிமரத்திற்கு அலங்கார தீபாராதனை நடந்தது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. கொடியேற்றிய பின் உற்ஸவர்களுக்கு சாற்றுமுறை, கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து 10 நாட்களும் காலை மற்றும்இரவு நேரங்களில் பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு விசேஷ அலங்கார வாகனங்களில் சுவாமி நான்கு ரதவீதிகளில் புறப்பாடு நடக்கிறது. ஏப்.5 காலை 9:00 மணிக்கு மேல் 40 அடி உயர பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !