உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் யூனியன் டேங்க் ரோட்டில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோயில் புனரமைப்பு பணிகள், சமீபத்தில் நிறைவு பெற்றன. கும்பாபிஷேக விழாவையொட்டி,  காலை, 11:00 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், மாலை, 6:00 மணிக்கு முதல் கால பூஜை, வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம், 108 மூலிகை திரவிய ஹோமம், மருந்து சாற்றுதல், வேத பாராயணம் ஆகியன  நடந்தன. மறுநாள் காலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, சக்தி அளித்தல் நடந்தன. பின்னர், புனித தீர்த்தங்கள் அடங்கிய திருக்குடங்கள் கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.  திருஞானசம்பந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம்  வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !