உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் நாளை அவதார திருநாள் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் நாளை அவதார திருநாள் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில் நாளை அவதார திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. திருக்கோவிலூர், வடிவேல் நகரில், சீரடி  குபேர சாய்பாபா கோவில் உள்ளது. நாளை அவதார திருநாளை முன்னிட்டு, ஆலய வளாகத்தில் மகாயாக பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு மஹா யாகம், 11:00 மணிக்கு சுவாமிக்கு மகா  அபிஷேகம், 11:30 மணிக்கு பூர்ணாகுதி, 12:30 மணிக்கு ஆரத்தி பூஜை மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6:30 மணிக்கு ஆரத்தி பாடலுடன் பல்லாக்கு சேவை  நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சுப்பு உள்ளிட்ட பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !