திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் ஆண்டு விழா கோலாகலம்
ADDED :977 days ago
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக 7ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.விசாலாட்சி உடனமர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷகம் நடைபெற்று ஏழாண்டு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து கோவில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விக்னேஸ்வரர் பூஜையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி துவங்கியது. அனுக்ஞை புண்யாகம், 108 சங்காபிேஷகம், கலச பூஜை மற்றும் பூர்ணாஹுதி ஆகியவற்றுடன் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. அதையடுத்து மூலவர் விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, சுப்ரமணியர் உள்ளிட்ட சன்னதிகளில் பல்வேறு திரவியங்களால் மகா அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.