திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ராம நவமி மகோத்ஸவம்
ADDED :921 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு கோயிலில் எழுந்தருளியுள்ள மூலவர். லட்சுமணன், பரதன், சத்துருக்கன், அனுமன், சீதா தேவி சமேத ராமர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்து அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து தீபாரதனையை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்தனர். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலிலும் சீதாதேவி சமேத ராமர், லட்சுமணனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.