கோதண்டராமர் கோவில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :961 days ago
தேவகோட்டை: தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோவிலில் ராமநவமி பிருமோத்ஸவம் நேற்று துவங்கியது. உற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ கோதண்டராமர், சீதாபிராட்டி, லட்சுமணர் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து சீனிவாசன், பாலாஜி பட்டர்கள் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பகல் 11:30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கொடிக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பூஜையை தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. தினமும் காலையிலும் மாலையிலும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. ஏப். 4 ல் திருக்கல்யாணமும், ஒன்பதாம் நாளான ஏப். 7 மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.