உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி ஆண்டவர் பங்குனி லட்சார்ச்சனை துவக்கம்: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

வடபழநி ஆண்டவர் பங்குனி லட்சார்ச்சனை துவக்கம்: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, லட்சார்ச்சனை துவங்கியது. வரும் 3ம் தேதிவரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.

லட்சார்ச்சனை காலை 7:00 மணிக்கு துவங்கியது. அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். லட்சார்ச்சனை நண்பகல் 12:30 மணிவரையிலும், மாலை 5:30 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நடை பெறுகிறது. பக்தர்களுக்கு லட்சார்ச்சனை பிரசாதம் வழங்கப்படும். பங்குனி உத்திரமான ஏப்., 4ம் தேதி இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடக்கிறது. அதைத் தொடர்ந்து, ஏப்., 5 முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. முதல் நாள் தெப்பத்தில் வடபழநி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !