திருவாலங்காடு வடாரணயேஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்
ADDED :962 days ago
திருவள்ளூர் : திருவாலங்காடு வடாரணயேஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு ஏழாம் நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. வண்டார் குழலி அம்மன் உடனுறை வடாரணயேஸ்வரசுவரர் கமலத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பழமையான திருவாலங்காடு வடாரணயேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் உற்சவர் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. வண்டார் குழலி அம்மன் உடனுறை வடாரணயேஸ்வரசுவரர் கமலத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.