உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை : பொறையாறு அருகே உள்ள, புகழ்பெற்ற புராதன பிரார்த்தனை தலமான ஒழுகைமங்கலம்  மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் பங்குனித்  திருவிழா  ஒவ்வொரு ஆண்டும் 5 வாரங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். பங்குனித்  திருவிழாவையொட்டி கடந்த மாதம் 26- ம் தேதி  பூச்சொரிதல் வைபவம் நடைபெற்றது. இன்று கொடியேற்ற விழா நடைபெற்றது.இதனையொட்டி சீதளா  பரமேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்,அர்ச்சனைகள் செய்யப்பட்டன.தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி  ஏற்றப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. ஏப்.9-ம் தேதி தேரோட்டம், 16-ம் தேதி உதிரவாய் துடைத்தல், 23-ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம், 30-ம் தேதி விடையாற்றி உற்சவம்  ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கோயில் அறங்காவலர்கள்,  தமிழகத்தின் பலலவேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள்  கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !