தென்காசி கற்பக விநாயகருக்கு மெகா சைஸ் கொழுக்கட்டை
ADDED :4783 days ago
தென்காசி: தென்காசி கற்பக விநாயகருக்கு 40 கிலோ "மெகா சைஸ் கொழுக்கட்டை படைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தென்காசி தெற்குமாசி வீதி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம், வெள்ளி அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 40 கிலோ எடை கொண்ட "மெகா சைஸ் கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
"மெகா சைஸ் கொழுக்கட்டை தயாரிக்க 10 கிலோ பச்சரிசி, 12 கிலோ வெல்லம், 8 கிலோ தேங்காய், 12 கிலோ கடலை பருப்பு மற்றும் நெய் பயன்படுத்தப்பட்டது. சிறப்பு தீபாராதனை வழிபாட்டிற்கு பிறகு "மெகா சைஸ் கொழுக்கட்டை பக்தர்களுக்கு பகிர்ந்து பிரசாதமாக வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை வழிபாடுகளை சுந்தரராஜன் வாத்தியார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.