உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி பங்குனி திருவிழா கோலாகலம்: நாளை குதிரை வாகனம்

பரமக்குடி பங்குனி திருவிழா கோலாகலம்: நாளை குதிரை வாகனம்

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடந்து வரும் நிலையில், நாளை குதிரை வாகனத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார்.

இக்கோயிலில் பங்குனி விழா மார்ச் 28 தொடங்கி கொடி ஏற்றத்துடன் நடந்து வருகிறது. தினமும் மூலவர் வெள்ளி கவச அலங்காரம், சந்தன காப்பு, தங்க கவசம், முத்தங்கி சேவை என அருள்பாளிக்கிறார். மேலும் பல வண்ண பட்டுடுத்தி பின்னல் சடை இட்டு பக்தர்களுக்கு அருள் தருகிறார். இந்நிலையில் தினமும் உற்சவர் அம்மன் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதி வலம் நடக்கிறது. 8 ம் திருநாளான நாளை இரவு 7:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் அருள்பாளிக்க உள்ளார். மேலும் ஏப்., 5 காலை, மதியம் அக்னி சட்டி ஊர்வலம், இரவு 8:00 மணிக்கு மின் அலங்கார தேரில் அம்மன் உலா வருகிறார். காப்பு கட்டி விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !