உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

சென்னிமலை மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி: அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.

அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். முன்னதாக, கடந்த மாதம் 23ம் தேதி கம்பம் நடுதல்,பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின்னர், அம்மை அழைத்தல்,அபிஷேக ஆராதனை, தீர்த்த குடம் எடுத்தல், படைக்கலம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்து கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பூச்சாட்டு விழா,மஞ்சள் நீராடுதல்,அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !