மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
ADDED :1002 days ago
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாட்படுகிறது. இந்தாண்டு விழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. காலை 7.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்ட தேரை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 மாட வீதிகளில் வலம் வந்தது. சிவ வாத்தியம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை அறுபத்து மூவர் விழா நடக்கிறது. வெள்ளி விமானத்தில் சுவாமி நாயன்மார்களோடு வலம் வருவார். 5ம் தேதி ஐந்திருமேனிகள் விழா, 6ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.