கிளி வாகனத்தில் முத்தாலம்மன் வீதி உலா
ADDED :1003 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். இக்கோயிலில் பங்குனி விழா மார்ச் 27 இரவு காப்பு கட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. இரவு அம்மன் காமதேனு வாகனத்தில் வீற்றிருந்தார். நாளை இரவு குதிரை வாகனத்திலும், நாளை மறுநாள் இரவு 8:00 மணிக்கு மின் அலங்கார தேரில் நான்கு மாட வீதிகளில் வலம் வர உள்ளார். ஏப்., 7 நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.