நாகை அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :956 days ago
நாகப்பட்டினம்: நாகையில் மிக பழமையான பிரசித்திப் பெற்ற அபீதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகையில் அமைந்துள்ளது மிக பழமையான பிரசித்திப் பெற்ற அபீதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீஸ்வரர் கோவில்.தேவேந்திரன் பூஜை செய்து சாபம் விமோசனம் பெற்ற இக்கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 24 ம் தேதி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக இன்று சிறப்பு மலர் அலங்காரத்தில் தியாகராஜ சுவாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.