பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா : பக்தர்கள் பால்குடம்
ADDED :1029 days ago
பட்டிவீரன்பட்டி: எஸ்.தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் நாள்தோறும் நடந்தன. நேற்று பாலசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை காவடி, பால்குடம் தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பெருமாள் கோயிலில் இருந்து பாலசுப்ரமணியர் கோயிலுக்கு ஆடி வந்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் நீரூற்றி மகிழ்வித்தனர். அன்னதானம் நடந்தது. பகலில் பாலசுப்பிரமணியருக்கு தீச்சட்டி எடுத்து வந்து பிரார்த்தனை நிறைவேற்றினர்.