உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி காந்த குளத்து முனியசாமி கோயில் பால்குட விழா

பரமக்குடி காந்த குளத்து முனியசாமி கோயில் பால்குட விழா

பரமக்குடி: பரமக்குடி காந்த குலத்து முனியப்ப சாமி, காளீஸ்வரி அம்மன் கோயில் 56 ஆம் ஆண்டு பால்குட விழா நடந்தது.

பால்குடமானது காட்டு பரமக்குடி கலியுகம் கண்ட விநாயகர் கோயிலில் இருந்து இன்று காலை புறப்பட்டது. தொடர்ந்து ஓட்ட பாலம், ஐந்து முனை ரோடு, பொன்னையாபுரம் வழியாக முனியப்ப சாமி கோயிலை அடைந்தனர். அங்கு பால், இளநீர், வேல் காவடி, அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினார். பின்னர் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளுக்கு பின் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !