செஞ்சி அருணாசல ஈஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :959 days ago
செஞ்சி: செஞ்சி அருணாசல ஈஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
செஞ்சி அபிதகுஜாம்பாள் சமேத அருணாசல ஈஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அருணாசலஈஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அருணாசலஈஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு திருக்கல்யாண வைபம் வெகு விமர்சியாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது.