பகவதி அம்மன் கோயில் பங்குனி உற்சவ விழா
ADDED :959 days ago
அலங்காநல்லூர்: வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பகவதி அம்மன் கோயில் 31ம் ஆண்டு பங்குனி உற்சவ விழா மார்ச் 26 கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் ஏப்.,2,3ல் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தும், நேற்று முன்தினம் இரவு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையை தொடர்ந்து சாஸ்தா அய்யனார் கோயிலில் சக்தி கரகம், மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.