பாதாள செம்பு முருகன் கோயிலில் குவிந்த வெளிமாநில பக்தர்கள்
ADDED :17 hours ago
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாதாளசெம்பு முருகன் கோயில் உள்ளது. நேற்று தைப்பூச விழாவை முன்னிட்டு மூலவருக்கு பாலாபிஷேகம், ராஜ அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. முன்பதிவு செய்யாமல் வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். உத்திரபிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடக பக்தர்கள் முன்பதிவு செய்த நிலையில், கருங்காலி மாலை வாங்கி வந்து தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம், மோர் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு குபேர பூஜை செய்யப்பட்ட புதிய 20 ரூபாய் நோட்டுகளை, நிர்வாகி அறிவானந்த சுவாமி வழங்கினார்.