அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் உற்ஸவம்: கெடா வெட்டி சிறப்பு பூஜை
ADDED :1019 days ago
அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி, முத்தாலம்மன், அய்யனார், கருப்பண்ண சுவாமி கோயில் பங்குனி உற்ஸவம் ஏப்.,4ல் துவங்கியது. விழாவில் முதல் நாள் அம்மனுக்கு சக்தி கெடா வெட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது அம்மன் சர்வ அலங்காரத்தில் முளைப்பாரி ஊர்வலத்துடன் எழுந்தருளினார். பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். ஏப்.,5ல் தீவட்டி பரிவாரங்களுடன் முனியாண்டி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக சென்று அருள்பாலித்தார். அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி பூஞ்சோலை சென்றார். இன்று காலை முனியாண்டி கோயிலில் கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. இரவு அய்யனார், கருப்பண்ண சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.