கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED :1018 days ago
கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மாரச் 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவரான முத்துமாரியம்மனுக்கு சிறப்புபூஜை நடைபெற்று குதிரை, யானை, ரிஷபம், அன்னப்பறவை, வெள்ளி குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா நடந்தது. பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் வேல்குத்தி, அக்கினி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கி நேத்திக்கடன் செலுத்தினர்.முத்துமாரியம்மனுக்கு பால், மஞ்சள்,சந்தனம்,திரவிய பொடி உட்பட 21 வகையான அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தது.விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.