பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில் புரட்டாசி மாதப் பெருவிழா
ADDED :4777 days ago
புதுச்சேரி: புதுச்சேரி பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில், புரட்டாசி மாதப் பெருவிழா நாளை துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளியில் நடக்கும் விழாவில், நாளை மாலை (22ம் தேதி) காலை 6 மணி முதல் 8 மணி வரை கடையநல்லூர் பிரம்மஸ்ரீ ராஜகோபால் பாகவதர் குழுவினரின் குரு கீர்த்தனை, நாம சங்கீர்த்தனம், திவ்ய நாம பஜனை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு பாண்டுரங்க பிரசாத வினியோகம் நடைபெறுகிறது.23ம் தேதி மாலை4 மணி முதல் 6 மணி வரை வைத்திக்குப்பம் வேங்கடாஜலபதி பஜனைக்கூடம் சத்தியமூர்த்தி, பத்மநாபன் குழுவினரின் அபங்க பஜனை நடக்கிறது. 6.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை மஞ்சப்பரா பிரம்மஸ்ரீ மோகன் பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனமும், தொடர்ந்து பாண்டுரங்க பிரசாத வினியோகமும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை பஜன் சமாஜ் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.