பரமக்குடி முத்தாலம்மன் பூ பல்லக்கில் சயனத்கோலத்தில் வீதி உலா
ADDED :884 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில், பூ பல்லக்கில் அம்மன் சயனத்திருக்கோலத்தில் வீதி வலம் வந்தார்.இக்கோயிலில் பங்குனி விழாவில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பால்குட விழா நடந்தது. அன்று காலை பாலபிஷேகம் நடந்த நிலையில் இரவு அம்மன் சயன திருக்கோலத்தில் அருள் பாலித்தார். பின்னர் சிறப்பு மேள தாளங்கள் முழங்க பூ பல்லக்கில் இரவு முழுவதும் வீதி வலம் சென்றார். அப்போது பக்தர்கள் அம்மனை வரவேற்று தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான டிரஸ்டிகள் மற்றும் ஆயிர வைசிய சபையினர் செய்திருந்தனர்.