உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது

திருச்சி: ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நாளை 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறவிருக்கும்  ஸ்ரீ நம்பெருமாள்  விருப்பன் ( சித்திரை தேர்) திருநாளில் திருத்தேருக்கு ஸ்தம்ப  ஸ்தாபனம்  (முகூர்த்த கால்நடுதல் ) இன்று திங்கட்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சுபயோகம் கூடிய சுப தினத்தில் காலை 10.00 மணியிலிருந்து 10.30 மணிக்குள்  மிதுன லக்னத்தில் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் கண்காணிப்பாளர்கள் கோபல கிருஷ்ணன் , சரண்யா ,வெங்கடேசன் , உதவி கண்காணிப்பாளர் மோகன் , மணியக்காரர் ஸ்ரீதர் ,  நிலப்பிரிவு பாலசுப்பிரமணியன் , கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !