கோவை கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1278 days ago
கோவையில் உள்ள கோவில்களில் பங்குனி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ராம்நகர் சித்திவிநாயகர் வெண்ணெய் காப்பு அலங்காரத்திலும், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.